பக்கங்கள்

பக்கங்கள்

25 பிப்., 2013


                       புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் 
                                                   சுவிட்சர்லாந்து
                                           கண்ணீர் அஞ்சலி


                              செல்லத்துரை சத்தியமூர்த்தி
                                                                  (சனார்த்தன் )
                                       தோற்றம் :16.07.1948     மறைவு  24.02.2013

புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தை சேர்ந்த சுவிசில் வசித்து வந்த சத்தியமூர்த்தி இறைவனடி இறந்து விட்டார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத் தருகின்றோம் .அன்னார் ஊரதீவில் பிறந்து சுவிஸ் மண்ணில் சொலிகோவன் ,புரூக்டோர்ப் நகரங்களில் வசித்த காலப்பகுதியில் மக்களோடு அன்பாக பழகி அரிய  சேவைகளை செய்து  வாழ்ந்திருந்தார் .விருந்தோம்பலில் சிறப்புற்று விளங்கிய இவர் எல்லோரையும் அரவணைத்து நடப்பதில் இனிமையானவர் .ஊரதீவு பாணாவிடை சிவன் ஆலயம் ,மடத்துவெளி பாலசுப்பிரமணியர்  ஆலயம், கமலாம்பிகை மகா  வித்தியாலயம் போன்றவற்றின் பணிகளை செய்வதில் முன்னின்று உழைத்தவர் .சுவிசுக்கு வந்த புதிதில் எண்பதுகளில் தமிழ் மக்களின் தாயக விடுதலைக்கான சேவையில் முன்னின்று கடுமையாக உழைத்து எமது ஊர் மக்களின் பாரட்டுதலை பெற்றிருந்தார் . இவரது சொந்த உறவினர்களின் தொகையே அதிகமாக இருந்ததனால் இவரை ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து வழிகாட்டியாகவே பார்த்து மகிழ்ந்திருந்தனர் மக்கள் .

அன்னாருக்கு எமது புங்குடுதீவு மக்கள் சார்பில் இதயபூர்வமான அஞ்சலியை தெரிவித்து கொள்கிறோம் .அனைவரையும் இவரது இறுதிக் கிரியைகளில் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறோம் .அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறோம்

புங்குடுதீவு மக்கள்  விழிப்புணர்வு ஒன்றியம்.
சுவிட்சர்லாந்து
24.02.2013