பக்கங்கள்

பக்கங்கள்

24 பிப்., 2013



பிரபாகரன் மகன் படுகொலை எதிரொலி! சென்னை காங்கிரஸ் அலுவலகம் முற்றுகை
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று சென்னை காங்கிரஸ் அலுவலகம் மே17 இயக்கம் சார்பில் முற்றுகையிடப்பட்டது.
தமிழீழப் படுகொலையில் காங்கிரஸ் அரசு நேரடியாக தொடர்பு கொண்டுள்ளதை கண்டித்து, பல தமிழ் உணர்வாளர்கள் காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, தேசிய பாதுகப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோர் துணை போனதாகவும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த முற்றுகைப் போராட்டத்தில் மே17 இயக்கத்தினர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
இதில் மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர். முற்றுகை போராட்டத்தை முன் கூட்டியே அறிந்த காங்கிரஸ் கட்சியினர் அவர்கள் பாதுகாப்புக்கு ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களையும் காவல் துறையினரையும்  பாதுகாப்பக்கு அமர்த்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.