பக்கங்கள்

பக்கங்கள்

6 பிப்., 2013



18 வயது மாணவனுடன் 36 வயது பெண் ஓட்டம்


தென்காசி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மணிகண்டன் (வயது 18). இவர் இப்பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர்களது பக்கத்து வீட்டில்
வாடகைக்கு வசித்து வந்தவர் தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி போஜராஜ் மில் பகுதியை சேர்ந்த சிலேந்திரன். இவரது மனைவி தனலட்சுமி (எ) மலர்விழி (36).

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று சிலேந்திரன், தனலட்சுமி இருவரும் வீட்டை காலி செய்து விட்டு சென்றனர். அன்றிலிருந்து மாணவர் மணிகண்ட னையும் காணவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 
இந்த நிலையில் கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்த தனலட்சுமி ஏற்கனவே திருமணமானவர் என்றும், அவருக்கு 2 குழந்தைகள் இருப்பதும் தன்னுடன் ஏற்பட்ட காதலால் அவர்களை விட்டு விட்டு தன்னுடன் வந்ததாகவும், தற்போது மாணவன் மணிகண்டனுடன் ஏற்பட்ட காதலால் என்னை விட்டு விட்டு மாணவனுடன் சென்று விட்டதால் சிலேந்திரன் தெரிவித்த தகவல் மாணவனின் பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து தென்காசி போலீசில் மணிகண்டனின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவன் மணிகண்டன் மற்றும் தனலட்சுமியை போலீசார் தேனி மற்றும் மதுரை மாவட்ட பகுதியில் தேடி வருகின்றனர்.