பக்கங்கள்

பக்கங்கள்

25 பிப்., 2013

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 22ஆவது கூட்டத் தொடர் நாளை திங்கட்கிழமை சுவிற்ஸர்லாந்தின் தலைநகர் ஜெனீவாவில் ஆரம்பமாகிறது.
எமது விசேட செய்தி சேவை 24 மணி நேரமும் வழங்கி கொண்டிருக்கும் 
நாளை ஆரம்பமாகும் இக் கூட்டத் தொடர் எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.


இலங்கையின் மனித உரிமைகள் விசேட பிரதிநிதியும் பெருந்தோட்டத்துறை அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தலைமையில் வெளிவிவகார அமைச்சின் இரண்டு அதிகாரிகளும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் 6 சிரேஷ்ட அதிகாரிகளும் மேற்படி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜெனீவா செல்லவுள்ளனர்.

ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை பேரவையினால் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் 21ஆம் திகதி ஜெனீவா மனித உரிமை பேரவை கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணை கொண்டுவர தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.