பக்கங்கள்

பக்கங்கள்

19 பிப்., 2013


புனர்வாழ்வு அளிக்கப்பட்ட மேலும் 40 முன்னாள் புலி போராளிகள் வவுனியாவில் வைத்து நேற்று அவர்களது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா - மருதமடு புனர்வாழ்வு நிலையத்தில் ஒரு வருடகால புனர்வாழ்வு பயிற்சியைப் பூர்த்தி செய்த போராளிகளே நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலிப் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தால் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.