பக்கங்கள்

பக்கங்கள்

15 பிப்., 2013


கொழும்பு நகரினுள் தினமும் காலையில் சுமார் 41 ஆயிரம் சிறியரக வாகனங்கள் பிரவேசிப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இத்தகவல் கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
கொழும்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் முகமாக நேற்று மற்றும் முன்தினம் காலை முதல் பகல் 12 மணி வரை கொழும்பு நகரினுள் நுழையும் சிறியரக வாகனங்களின் கணக்கெடுப்பு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது.
கொழும்பினுள் உட்பிரவேசித்த சிறியரக வாகனங்கிளின் சாரதிகளிடம், உள்வரும் மற்றும் வெளிச் செல்லும் நேர விபரங்களை திரட்ட பொலிஸாரினால் பத்திரமொன்று வழங்கப்பட்டது. பின்னர் இப் பத்திரங்களின் மூலம் பெறப்பட்ட விபரங்களின் அடிப்படையில் கொழும்பு நகரினுள் தினமும் காலையில் சுமார் 41 ஆயிரம் சிறியரக வாகனங்கள் பிரவேசிக்கின்றமை தெரியவந்துள்ளது.