பக்கங்கள்

பக்கங்கள்

13 பிப்., 2013


பேருந்து கடலுக்குள் பாய்ந்து விபத்து! 5 பேர் படுகாயம்: யாழில் சம்பவம்
யாழ்ப்பாணத்தில் இருந்து ஊறுகாவற்றுறைக்கு சென்றுக்கொண்டிருந்த பேருந்து பண்ணை கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று மாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.