பக்கங்கள்

பக்கங்கள்

8 பிப்., 2013

6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா: மிதாலி அசத்தல் சதம்
மகளிர் உலகக் கிண்ணத் தொடரில் அணித்தலைவி மிதாலி ராஜ் சதம் அடித்து கைகொடுக்க 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 7வது இடம் பிடித்தது.
சர்வதேச கிரிக்கெட் வாரியம் சார்பில் 10வது மகளிர் உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் மும்பை மற்றும் கட்டாக் நகரில் நடைபெற்று வருகின்றன. லீக் சுற்றில் கடைசி இடம் பிடித்த இந்தியா, பாகிஸ்தான் அணிகள் "சூப்பர்-6" சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது.
இத்தொடரில் 7, 8வது இடத்துக்கான போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய நகிதா கான் 2 ஓட்டங்களும், அமீன் 12 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்பு களமிறங்கிய நயின் அபிதி அரைசதம் கடந்த 58 ஓட்டங்களும், நிதா டார் 68 ஓட்டங்களும் எடுத்து கைகொடுக்க பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 192 ஓட்டங்கள் எடுத்தது.
எட்டக்கூடிய இலக்கை துரத்திய இந்திய அணி 46 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 7வது இடத்தை பிடித்தது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணித்தலைவி மிதாலி ராஜ் ஆட்டமிழக்காமல் சதம் கடந்து 103 ஓட்டங்கள் எடுத்தார். ஆட்டநாயகியாக மிதாலிராஜ் தெரிவானார்.