பக்கங்கள்

பக்கங்கள்

26 பிப்., 2013


ஆன்மீக பயணமாக தமிழகத்திலுள்ள புனித வேளாங்கண்ணி மாதா தேவாலயத்திற்கு சென்ற இலங்கையைச் சேர்ந்த 70 பேரைத் தமிழக பொலிஸார் திருப்பி அனுப்பியுள்ளனர்.
புனித வேளாங்கண்ணி மாதா ஆலயத்திற்கு செல்வதற்கு நேற்று திருச்சி விமான நிலையத்தினை வந்தடைந்த இலங்கை பக்தர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

பின்னர் இலங்கையர் குழுவினர் 2 பஸ்களில் ஏறி வேளாங்கண்ணிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடமன்கலம் பகுதியில் இவர்கள் சென்ற பஸ்கள் நிறுத்தப்பட்டதுடன், பிரச்சினைகளை தவிர்த்துகொள்ளும் முகமாக திரும்பிச் செல்லுமாறும் இவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இவர்களுக்கு எதிராக தமிழீழ ஆதரவாளர்களால் பாரிய எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
தமிழக சட்ட ஒழுங்கு பிரச்சினை காரணமாக இவர்களை திருப்பி அனுப்ப வேண்டி ஏற்பட்டதாக திருவாரூர் மாவட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கையிலிருந்து தமிழகம் சென்ற பக்தர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் பாரிய எதிர்ப்புகளுக்க மத்தியில் இலங்கைக்கு திரும்பி வந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான எதிர்ப்புக்கள் வலுப்பெற்றவரும் வேளையில், இலங்கைத் தலைவர்கள், சிங்கள் மக்கள் மீது தமிழக மக்கள் தமது எதிர்ப்பினை வெளிக்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.