பக்கங்கள்

பக்கங்கள்

8 பிப்., 2013




        இந்தியாவிலுள்ள புத்தகயா மற்றும் திருப்பதிக்கு இரண்டாவது முறையாக  8-ந் தேதி  வரவிருக்கிறார் ராஜபக்சே. தமிழகத்திலுள்ள ஈழ ஆதரவு கட்சிகள், அமைப்புகள் அனைத்தும் ராஜபக்சே வின் வருகையை அனுமதிக்கும் இந்திய அரசை கடுமையாக கண்டிப்பதுடன் பல் வேறு ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றன.

சென்னை தி.நகரிலுள்ள திருப்பதி தேவஸ் தானத்தை இழுத்து மூடும் போராட்டத்தை 7-ந் தேதி நடத்துகிறது தமிழர் எழுச்சி இயக்கம். இந்த போராட்டத்திற்காக ஈழ ஆதரவு சக்திகளை ஒருங்கிணைத்துவரும் அந்த இயக்கத்தின் தலைவர் வேலுமணி,’’""இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் அடைக்கப்பட வேண்டியவர் ராஜபக்சே. அதனால்தான்  இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் ராஜபக்சே நுழைய முடியாத நிலை உருவாகியுள்ளது. ஆனால் 9 கோடி தமிழர்கள் வாழ்கின்ற இந்தியாவில் இந்திய அரசின் திட்டமிட்ட சூழ்ச்சியோடு தொடர்ந்து ராஜபக்சே வரவேற்கப்படுகிறார். 

இலங்கையில் தமிழர்கள் வழிபடும் 2000-க்கும் அதிகமான இந்து கோயில்களை இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர். இந்து கோயில்களை நிர்மூலமாக்கி புத்த மத வெறியனாக இருக்கும் ராஜபக்சேவை திருப்பதி தேவஸ்தான வழிபாட்டிற்கு எப்படி அனுமதிக்கலாம்? இதனை கண்டிக்கும் விதமாக திருப்பதி தேவஸ்தானத்தை இழுத்து மூடும் போராட்டத்தை நடத்தவிருக் கிறோம்''’என்கிறார் அழுத்தமாக.

தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், திராவிடர் விடுதலை கழகம், இந்து மக்கள் கட்சி, மே 17 இயக்கம், போர்க் குற்றங்களுக்கு எதிரான இளை ஞர்கள் கூட்டமைப்பு, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட ஈழ ஆதரவு கட்சிகள், அமைப்புகள் என அனைத்தும் ராஜபக்சே வின் வருகைக்கு கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்து கின்றன. ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது தமிழக வாழ் வுரிமைக் கட்சி. இதன் தலைவர் வேல்முருகன், ’""இந்தியாவுக்கு சுதந்திரமாக சென்று வருவதன் மூலம் இந்திய அரசும் இந்திய மக்களும் தனக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை சர்வதேசத்திற்கு காட்ட முயற்சிக்கிறார் ராஜபக்சே. அந்த யோசனையை போட்டுக் கொடுத்திருப்பதே இந்திய அரசுதான். இதனை கண்டிப்பதற்கும் ராஜபக்சேவின் வருகை தடுக்கப்படுவதற்கும் இந்த முற்றுகைப் போராட்டத்தை நடத்துகிறோம்'' என்கிறார் ஆவேசமாக. 

திருப்பதி தேவஸ்தான ட்ரஸ்ட்டிகளில் ஒருவரான தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியனின் பொதுச்செயலாளர் கண்ணையாவிடம் இதுபற்றி கேட்டபோது, ""தமிழர்களின் உணர்வுகளில் நியாயம் உண்டு. ஆனால், மத்திய அரசு மற்றும் ஆந்திர அரசின் விருந்தினராக வரும் ராஜபக்சேவை தடுக்கும் அதிகாரம் ட்ரஸ்ட்டிகளுக்குக் கிடையாது'' என்கிறார்.