பக்கங்கள்

பக்கங்கள்

13 பிப்., 2013


யாழ் – கண்டி ஏ9 வீதியின் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் சுமார் 60 அடி அளவிலான பாதை இன்று திங்கட்கிழமை மாலை கீழ் இறங்கியது. கட்டுகஸ்தோட்டை நகரில் அமைந்துள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அண்மையிலான வீதியே கீழிறங்கியுள்ளது.

கடந்த காலத்தில் ஏற்பட்ட கடும் மழை காரணமாக மண் சரிவு அபாயத்தை எதிர்நோக்கிய இந்த பிரதேசம் பொல்கொல்லை வாவியின் வான் கதவுகள் திறக்கப்பட்டமையினாலேயே கீழிறங்கியுள்ளது என பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.