பக்கங்கள்

பக்கங்கள்

13 பிப்., 2013


யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விடுவிக்கப்படுவர்: ஜனாதிபதி

படையினரால் கைது செய்யப்பட்டு வெலிகந்தை புனர்வாழ்வூ நிலையத்தில் புனர்வாழ்வூக்கு உட்படுத்தப்பட்டு வரும் யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் விரைவில் விடுதலை
செய்யப்படுவரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி இன்று காலை 10.00 மணியளவில் யாழ் ரில்கோ விருந்தினர் விடுதியில் நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலும் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்
.