பக்கங்கள்

பக்கங்கள்

21 பிப்., 2013

இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தினால் நடத்தப்பட்டு வரும் மாவட்ட  கழகங்களுக்கிடையிலான போட்டியில் அம்பாறை மாவட்ட அணி அரை இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.
திருகோணமலை நகரசபை மைதானத்தில் நடைபெற்ற  அரை இறுதி நுழைவுக்கான போட்டியில் திருகோணமலை மாவட்ட அணியை நான்கிற்கு மூன்று என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியுள்ளது.


வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் அணிகளை வெற்றிகொண்டு அரை இறுதிக்கு  நுழைந்துள்ள அம்பாறை மாவட்ட அணி, அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட வரலாற்றில் முதன் முறையாக மாவட்டங்களுக்கிடையிலான  போட்டியில் தொடர் வெற்றிகளுடன் அரைஇறுதிக்கு நுழைந்துள்ளதாக  பயிற்றுவிப்பாளர் எம்.எல். ஏ. தாஹிர் தெரிவித்துள்ளார்.