பக்கங்கள்

பக்கங்கள்

17 பிப்., 2013



ஜெனீவா- ஐ.நா மனித உரிமைச் சபையில் இம்முறை சிறிலங்கா தொடர்பில் ஏழு உப மாநாடுகள் இடம்பெற இருப்பதாக தெரியவருகின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட பல தமிழர் அமைப்புகளும் பல சர்வதேச மனித உரிமை நிறுவனங்களும் இந்த உபமாநாடுகளை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை  தொடர்பில் அமெரிக்கா இன்னுமொரு பிரேரணையொன்றினை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கைத் தீவினை மையப்படுத்திய அனைவரது கவனமும் ஜெனீவாவினை நோக்கி திரும்பியுள்ளது.
புலம்பெயர் தமிழர் அரசியல் சக்திகளின் இலங்கை அரசுக்கு அழுத்தத்தினை கொடுப்பதற்கான தங்களது செயற்பாடுகளை ஜெனீவாவினை நோக்கி தீவிரமாகியுள்ளனர்.