பக்கங்கள்

பக்கங்கள்

27 பிப்., 2013


இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கியது அமெரிக்கா .Video

 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.அத்துடன், இலங்கையில் இனப் பிரச்சினைக்கான உரிய தீர்வினை இதுவரையில் அந்நாட்டு அரசு பெற்றுக் கொடுக்கவில்லை எனவும் அமெரிக்காவின் சர்வதேச நிறுவனங்களுக்கான துணைச் செயலாளர் எஸ்தர் பிரிம்மர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவாவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐநா மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத் தொடரின் 2வது நாள் உரையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இம்முறையும் இலங்கைக்கு எதிராக புதியதொரு பிரேரணையை அமெரிக்கா முன்வைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பிலான நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்தும் அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் இதன்போது அவர் கூறினார்.