பக்கங்கள்

பக்கங்கள்

27 பிப்., 2013



எம்.எல்.ஏ. விடம் அடி வாங்கினாரா விஜயகாந்த்?
தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது கட்சி எம்.எல்.ஏ. தாக்கினார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசிய வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தஞ்சாவூர் முதன்மை நீதிமன்றத்தில் நேரில்
ஆஜரானார்.
திருச்சி, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய  மாவட்டங்களில் இருந்து தேமுதிக தொண்ட ர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்திருந்தனர்.  ‘’இது பொய் வழக்கு.  அதனால் இப்படித்தான் திரண்டு வருவோம்’’ என்றுவிஜயகாந்த்தே செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
தொண்டர்கள் திரண்டிருந்ததால் விஜயகாந்த்தால் கோர்ட்டுக்குள் சீக்கிரத்தில் செல்ல முடியவில்லை.  சிலர் கூட்டத்தை விளக்கி விட்டபடியே சென்றனர்.  தேமுதிக எம்.எல்.ஏ.  பார்த்தசாரதி,  விஜயகாந்த்திடம் முண்டியடித்துக்கொண்டு வந்த தொண்டர்களை கைகளால் தடுத்துவிட்டபடியே  விஜயகாந்துக்கு பின்னால் சென்றார்.

தொண்டர்களை விலக்கிவிடும்போது பார்த்தசாரதியின் கை விஜயகாந்தின் தோள் மீது பட்டுவிட்டது.   விஜயகாந்த் திரும்பிப்பார்த்து,  புரிந்துகொண்டு, கூட்டத்தை சமாளித்துக்கொண்டே கோர்ட் உள்ளே சென்றுவிட்டார்.