பக்கங்கள்

பக்கங்கள்

22 பிப்., 2013

போரின் இறுதிக்கட்டத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை, போர் வலயத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்ற முற்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை, அனைத்துலக செஞ்சிலுவைக் குழு அடியோடு நிராகரித்துள்ளது. 
அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் சிறிலங்காவுக்கான தலைமைப் பிரதிநிதி வைவ்ஸ் ஜுவன்னோனி இது குறித்து கருத்து வெளியிடுகையில்,

“2009 மே மாதம் போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பாதுகாப்பாக வெளியேற்ற அனைத்துலக செஞ்சிலுவைக் குழு முயன்றதான குற்றச்சாட்டு தவறானது.

இதுபோன்ற பணிகளை நாம் செய்வதில்லை.

நாம் சிறிலங்காவில் மட்டும் பணியாற்றவில்லை.உலகெங்கும் 80 நாடுகளில் பணியாற்றுகிறோம்.

இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டால், அது எமது புகழையும், மனிதாபிமானப் பணிகளின் மீது கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டையும், அரசியல் நடுநிலைத் தன்மையையும் ஆழமாகப் பாதிக்கும்.

எமது பதிவுகளின் அடிப்படையில், இந்த விடயத்தில் நாம் தொடர்புபடவில்லை என்பதை அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் தலைவர் என்ற வகையில் கூறுகிறேன்.

சிறிலங்காவில் போரின்போது பணியாற்றுவது மிகவும் சவாலான விடயமாக இருந்தது.

குறுகலான மனிதாபிமான இடைவெளியை பாதுகாப்பது இலகுவானதாக இருக்கவில்லை.“என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.