பக்கங்கள்

பக்கங்கள்

1 மார்., 2013

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நாளைய தினம் ஜெனிவா நோக்கி பயணமாகவுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், அரியநேத்திரன், மற்றும் ஸ்ரீதரன் ஆகியோருடன் தானும் ஜெனீவா செல்லவிருப்பததாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்
எமது ஒன்லைன் உதயனுக்குத் தெரிவித்தார்.

மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், மற்றும் ஸ்ரீதரன் ஆகியோர் பிரித்தானியா சென்றுள்ள நிலையில் அங்கிருந்து ஜெனீவா பயணிப்பர் எனவும் தானும் அரியநேத்திரனும் நாளை ஜெனீவா செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜெனிவாவில் இடம்பெற்று வரும் 22வது மனித உரிமைகள் மாநாட்டு இடம்பெற்று வரும் நிலையில் கூட்டமைப்பு ஜெனிவா செல்வது குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=496871866001755082#sthash.qrwKwhVl.dpuf