பக்கங்கள்

பக்கங்கள்

27 பிப்., 2013



          லங்கையில் போர் முடிந்து வருடங்கள் பல கடந்துவிட்டன. ஆனால், இந்தியாவின் துணையோடு தமிழீழத்தில் ராஜபக்சே நடத்திய பச்சைப் படு கொலைகளுக்கு புதிது புதிதாக நிறைய ஆதாரங்கள் வெளிவந்தும் நீதி மட்டும் இன்னும் கிடைத்தபாடில்லை. 

இந்த நிலையில் பிரபாகரனின் 13 வயதே ஆன இளைய மகன் பாலச்சந்தி ரன் உயிருடனும் பிறகு கொல்லப் பட்டதுமான புகைப்படங்கள் சர்வதேச அள வில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. 

58 வயதாகும் தேசியத் தலைவர் பிரபாகரன்-மதிவதனிக்கு 29 வயது சார்லஸ்ஆண்டனி, 28 வயது துவாரகா, 13 வயது பாலச்சந்திரன் என 3 குழந் தைகள். சார்லஸும் துவாரகாவும் பிறந்து 10 வருடங்கள் கழித்து 1996-ல் பிறந்தவர் பாலச்சந்திரன். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஒரு போராளியாக இருந்தவர் பிரபாகரனின் மைத்துனர் (மதிவதனியின் தம்பி) பாலச்சந்திரன். இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலைகொண்டு புலிகளுக்கு எதிராக தாக்குதலை நடத்தியபோது இந்திய ராணுவத்தின் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார் பாலச்சந்திரன். ஒரு போராளியாக இருந்து வீரமரணத்தைத் தழுவிய தனது மைத்துனரின் பெய ரைத்தான் தனது இளைய மகனுக்குச் சூட்டினார் பிரபாகரன். நீண்ட வரு டங்கள் கழித்து பிறந்த மகன் என்பதால் பிரபாகரன் - மதிவதனிக்கு மட்டுமல்ல இயக்கத்தின் தளபதிகள் அனைவ ருக்குமே பாலச்சந்திரன் செல்லம் தான்.nakeran


பிரபாகரன் தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையுமே ஈழத்து மண்ணில் தான் வைத்திருந்தார். போர் உச்சக்கட்டத்தை எட்டும் முன்னரே, அவர்களைப் பாதுகாப்பான வெளி இடத்துக்கு அனுப்பி வைத்திருக்க முடியும். ஆனால்,  பிரபாகரனுக்கு அதில் கொஞ்சமும் உடன்பாடில்லை. இரண்டு மகன்களையும், மகள் துவாரகாவையும் மக்கள் பார்க்கும்படியான நிலையில்தான் பிரபாகரன் வைத்திருந்தார். மூத்த மகன் சார்லஸை போர்க்களத் தில் நிறுத்தியிருந்தார் பிரபாகரன். அதேபோல போர் மிகத் தீவிரமாக உக்கிரமடைந்தபோது, மதிவதனியை வெளியே அனுப்ப மூத்த தளபதிகள் முயற்சி எடுத்தனர். ஆனால், மதிவதனி வெளியேறக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் பிரபாகரன். மக்கள் வேறு, போராளிகள் வேறு, தனது குடும்பத்தினர் வேறு என்று  ஒருநாளும் பகுத்துப் பார்த்ததில்லை அவர். போரின்போது தன் குடும்பத்தினர் கூண்டோடு அழிந்து போகலாம் என்று அவர் அனுமானித்தே வைத்திருந்தார். சாவைப் பற்றிய அச்சமோ தயக்கமோ பிரபாகரனுக்கு ஒரு போதும் இருந்ததில்லை.

சார்லஸ் தலைமையில் இருந்த அணி, சிங்கள ராணுவ எதிரிகளை ஊடறுத்து தாக்குதல் நடத்த முள்ளிவாய்க்கால் பகுதியில் திட்டமிட்டு முன்னேறி யது. புலிகள் இயக்கத்தின் மூத்த போராளி பால்ராஜின் போர் வியூகமான ஊடறுப்பு ஸ்டைலில் இதனை கையாண்டார் சார்லஸ். ஆனால், புலிகளின் ஊடறுப்பு தாக்குதல் எப்படி இருக்கும் என்று துரோகி கருணா வால்  முன்கூட்டியே ஸ்கெட்ச் போட்டு ராணுவத்தின ருக்கு தரப்பட்டிருந்தது. அதனால் இந்த ஊடறுப்புத் தாக்குதலில் வீரமரணமடைந்தார் சார்லஸ். அதேசமயம், ஷெல் தாக்குதல்களும் அதி உச்சத்தில் இருந்தன. அந்த தாக்குதலில் பிரபாகரனின் மகள் துவாரகாவும் வீரச் சாவடைந்தார். இதை அறிந்து  மே 14, 2009 அன்று கே.பி.யை தொடர்பு கொண்டு  பேசிய பிரபாகரன்,’’"என்னுடைய ரெண்டு பிள்ளைகளையும் நாட்டுக்கு கொடுத்துட்டேன்ப்பா'’’என்றார்.

அதேபோல, போராளியாக இல்லையென்றாலும் இறுதிவரை தனது கணவரின் கட்டளையை ஏற்று போர்க்களத்திலே இருந்தவர் மதிவதனி. புலிகள் இயக்கத்தின் விமானப்படைப் பிரிவை உருவாக்கிய கர்னல் சங்கரின் மனைவி குகாவும் மதிவதனியும் நெருங்கிய தோழிகள். நிறைய விஷயங்களை விவாதித்துக் கொள்கிற அளவுக்கு இருவருக்குமான நட்பு விரிவடைந்திருந்தது. போர் உச்சத்தில் இருந்தபோது வெளிநாட்டுத் தொடர்புகளிடம் பேசிய குகா, "மதி அண்ணிக்கு ஷெல் அடிச்சிருக்கு' என்று கூறியிருக்கிறார். அதன் பிறகு குகாவின் குரல் எங்கும் கேட்கவில்லை.

இதற்கிடையே போர் நிறுத்தம் அறிவிக்கப் படுகிறது. இப்படிப்பட்ட தருணத்தில்தான் அப்பா, அம்மா, அண்ணன், அக்காள் யாரையும் பார்க்க முடியாத சூழலில் மக்களோடு மக்களாக தனித்து விடப்படுகிறான் பாலச்சந்திரன். பிரபாகரனின் மெய்க்காப்பாளர்களான கரும்புலிகள் 5 பேர் பாலச்சந்திரனை பத்திரமாக வெளியே கொண்டு செல்ல முயற்சித்தபோது மே 14-ந் தேதி ராணுவத்தின் பிடியில் சிக்கிக்கொண்டனர். அவர்களை 53-வது படைப்பிரிவின் பிரிகேடி யரிடம் கொண்டு செல்கின்றனர். 


தனது பாதுகாப்பிற்காக மணல் மூட்டைகளை பக்காவாக அமைத்து அதி உயர் பங்கர் களை உருவாக்கி வைத்திருந்தான் அந்த பிரி கேடியர். ராணுவத்தின் உயர் பொறுப்புகளில் உள்ளவர்களுக்கே அதிஉயர் பாதுகாப்பு பங்கர்கள் அமைக்கப்படும். பாலச்சந்திரன் உட்கார்ந்திருக்கும் பங்கரை பார்க்கும்போது ராணுவ உயரதிகாரிக்கு அமைக்கப்பட்ட அதி உயர் பாதுகாப்பு பங்க ராகத்தான் காட்சி தருகிறது. அந்த பங்கரில்தான் உட்கார வைக்கப்பட்டான் பாலச்சந்திரன்.  அந்த இளம் சிறுவனைப் பார்த்ததும் பிரபாகரனின் மகனாக இருக்குமோ என்கிற சந்தேகம் பிரிகேடியருக்கு வந்திருக்கிறது. அவனைப் பற்றி மெய்க்காப்பாளர்களிடம் விசாரிக்க, அவர்கள் உண்மையை சொல்லவில்லை. உடனே சிங்கள ராணுவத்தின் அப்போதைய தலைமை தளபதி சரத்பொன்சேகாவுக்கு தங்களது சந்தேகங்களை தெரிவிக்கின்றனர். சரத் மூலம் மகிந்த ராஜ பக்ஷேவின் சகோதரனும், பாதுகாப்புத்துறை செகரட்டரியுமான கோத்தபாயவுக்கு அந்த தகவல் செல்ல, கருணா ஆட்களை அங்கு அனுப்பி வைக்கிறான் கோத்தபாய.

சம்பவ இடத்துக்கு வந்த கருணா ஆட்கள், "இவன் பிரபாகரனின் மகன் தான். பெயர் பாலச்சந்திரன்' என்று காட்டிக் கொடுத்தார்கள். சந்தேகம் தீர்க்கப்பட்டதை உடனே கோத்த பாயவுக்கு தெரிவித்த பிரிகேடியர், "என்ன செய்வது?' என்று கேட்க, "பிறகு சொல்கிறேன்' என்று உத்தரவிட்ட கோத்தபாய, தனது அண்ணன் ராஜபக்சேவிடம் பேசுகிறான். அத னைத் தொடர்ந்து கோத்தபாய, சரத் பொன்சேகா, கருணா ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினான் ராஜபக்சே. அப்போது அவர்கள், "ஒரு இயக்கத்தின் தலைவருடைய மகனையும் தலைவராகத்தான் தமிழர்கள் பார்ப்பார்கள். இளம் சிறாராக அவன் (பாலச்சந்திரன்) இருந்தாலும் அவனது வாழ்க்கை களத்திலேதான் இருந்துள்ளது. அதனால் அவன் வளர் வது ஆபத்து. ஸோ... சுட்டுடலாம்' என்று ஆலோசிக் கின்றனர். இந்த ஆலோசனையின்படி, சம்பவ இடத்தி லிருக்கும் பிரிகேடியருக்கு சுட்டுக் கொல்ல உத்தர விடுகிறான் கோத்தபாய. அந்தக் கட்டளையை நிறைவேற்றும் பொருட்டு பாலச்சந்திரனின் மெய்க் காப்பாளர்கள் 5 பேரை யும் பாலச்சந்திரனின் கண் முன்னாலேயே முதலில் சுட்டு கொல்கின்றனர் சிங்கள ராணுவ நாய்கள். மெய்க்காப்பாளர்களை சுட்டு அந்த இளம் சிறுவனுக்கு மன உளைச் சலை ஏற்படுத்தியிருக்கிறது ராணுவம். இந்த உளவியல் சித்ரவதையை எந்த ரூபத்தில் பார்த்தாலும் ஜீரணிக்க முடியாது.

மெய்க்காப்பாளர்கள் படுகொலை செய்யப்பட்டதையடுத்து பிரிகேடியரின் துப்பாக்கி, பாலச்சந்திரனின் நெஞ்சை நோக்கி மிக அருகில் நீள்கிறது. தன்னை சுட்டுக்கொல்லப் போகிறார்கள் என்று அவனுக்கு தெரிந்திருந்தும் அவனிடம் பயமோ அலறலோ அதிர்ச்சியோ எந்த ஒரு உணர்ச்சியும் வெளிப்படவில்லை. 

துப்பாக்கி முனையை துணிச்சலுடன் எதிர்கொண்டிருக்கிறான் பாலகன் பாலச் சந்திரன். அதே துணிச்சலுடன் தன் நெஞ்சுக்கு நேராக துப்பாக்கியை நீட்டி யிருந்தவனைப் பார்த்து, "எங்க அப்பா வருவார்... நிச்சயம் வருவார்' என்று மழலை மாறாத குரலில் பேசியிருக்கிறான் பாலச் சந்திரன். அதன்பிறகே முதல் குண்டு பாய... அப்படியே மண்ணில் சரிந்து வீழ்ந்தது பாலச்சந்திரனின் சடலம். இதனையடுத்து மேலும் 4 குண்டுகள் பாலச்சந்திரனின் உடலை துளைத்திருக்கிறது. பாலச்சந்திரனின் இந்த கடைசி நிமிடங்களையும் அவன் பேசியதையும் பதிவு செய்து, ராஜபக்சேவிடம் காட்டப்பட்டிருக்கிறது. 

பாலச்சந்திரனின் கடைசி நிமிடங்களை பதிவு செய்த ராணுவத்திலுள்ள சரத் பொன்சேகா ஆதரவாளர்களே இதனை வெளிப் படுத்தியிருக்கிறார்கள்.

பங்கரில் உட்கார வைக்கப் பட்டிருந்த போது சட்டை போடாத பாலச்சந்திரன் அணிந்திருந்த கருப்பு-காக்கி நிறக் கால்சட்டையே அந்த வீரச்சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்ட படத்திலும் உள்ளது. இரண்டு படங்களும் சில நிமிடங்கள் அல்லது சில மணி இடைவெளியில் ஒரே கேமராவால் எடுக்கப்பட்டவை என உறுதியாகியுள்ளது.

தமிழீழத் தாயகத்திற்காக தன் உயிரை தியாகம் செய்திருக்கிறான் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன்.

-இரா. இளையசெல்வன்