பக்கங்கள்

பக்கங்கள்

5 பிப்., 2013


வவுனியா முன்னாள் புளொட் உறுப்பினரின் சடலம் மீட்பு
வவுனியாவில் வயோதிபர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.வவுனியா சாளம்பைக்குளப் பிரதேசத்தில் இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் முன்னாள் புளொட் உறுப்பினரான தாலிக்குளத்தைச் சேர்ந்த வடிவேலு செல்வகுமார் (வயது 51) என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று மாலை மாடு மேய்ப்பதற்காக வீட்டில் இருந்து சென்ற இவர் சாளம்பைக்குளம் வயல் பகுதியில் இருந்து சடலமாக இன்று மீட்கப்பட்டள்ளார்.

எனினும் இவரது மரணம் குறித்து எதுவும் தெரியவில்லை எனவும் சடலம் தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கெண்டு வருகின்றனர்.