பக்கங்கள்

பக்கங்கள்

17 பிப்., 2013


நவநீதம்பிள்ளையின் முயற்சிகளுக்கு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் வரவேற்பு

இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை காட்டிவரும் முனைப்புகளுக்கு பல புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தமது வரவேற்பை வெளியிட்டுள்ளன.
பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழ் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் தமிழ் அரசியல் நடவடிக்கை சபை என்பன இந்த வரவேற்பை வெளியிட்டுள்ளன.
இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்தாமை குறித்த இந்த அமைப்புக்கள் இலங்கை அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டை சுமத்தியுள்ளன.
எனவே நவநீதம்பி;ள்ளையின் அறிக்கையை ஏற்று, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு, இலங்கை விடயத்தில் சர்வதேச விசாரணைக்குழு ஒன்றை அமைக்கவேண்டும் என்று ஐக்கிய அமெரிக்காவின் தமிழ் அரசியல் நடவடிக்கைக்குழுவின் பேச்சாளர் யோசோ நற்குணம் கோரிக்கை விடுத்துள்ளார்.