பக்கங்கள்

பக்கங்கள்

4 பிப்., 2013


கூடங்குளம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடாவிட்டால் போராட்டம்: உதயகுமார் அறிவிப்பு 
கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அணு உலை முற்றுகை என பல்வேறு பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ள அவர்கள் அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து
இன்று ஆலோசனை நடத்தினர்.

இதற்கான கூட்டம் இடிந்தகரையில் இன்று நடந்தது. இதில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் , தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ,தமிழ் தேச பொதுவுடைமை தலைவர் மணியரசன் உள்பட மீனவர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் உதயகுமார் செய்தியாளர்களி
டம்,
’’கூடங்குளம் அணுஉலை பற்றி இன்னும் 15 நாட்களுக்குள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இல்லையென்றால் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மீனவர்கள், அணு உலை எதிர்ப்பாளர்கள் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும். நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கூடங்குளம் அணு உலை யையும், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் துறைமுகத்தையும், குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விவேகானந்தர் மண்டபத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவார்கள்’’ என்று கூறினார்.