பக்கங்கள்

பக்கங்கள்

22 பிப்., 2013



பிரபாகரனின் மகன் கொலை விவகாரத்தை விவாதிக்க அனுமதி மறுத்ததால், நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. இதனால், சபை மதியம் 12 வரை ஒத்தி வைக்கப்பட்டது.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் 14 வயது மகன் பாலசந்திரன் சிங்கள இராணுவத்தினரால் பிடித்து வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட தகவலை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டது.
இதற்கு தமிழகத்தில் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று தொடங்கிய நாடாளுமன்றத் கூட்டத்தொடரிலும் இந்தப் பிரச்னை எழுப்பப்பட்டது.
பிரபாகரன் மகன் கொலை பற்றி விசாரணை நடத்த வேண்டும். இதுபற்றி சபையில் விவாதிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
அனைத்து எம்.பிக்களும் ஒரே நேரத்தில் எழுந்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்த, சபாநாயகர் மீராகுமார் அனுமதி மறுத்தார்.
இதனால், சபையில் அமளி ஏற்பட்டது.
ஹைதராபாத் குண்டுவெடிப்பு பிரச்சினையை பி.ஜே.பி. எம்.பிக்கள் கிளப்பினர். இதனாலும் சபையில் அமளி நிலவியது. அதை அடுத்து பகல் 12 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.
மேல் சபையில் இதே விவகாரங்கள் எதிரொலித்ததால், அந்த சபையும் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.