பக்கங்கள்

பக்கங்கள்

4 பிப்., 2013


ஐ.நா மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்!- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பு மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்கவும், தீர்மானத்தின் பரிந்துரைகளை அமுல்படுத்தவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்காத காரணத்தினால் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் நிறுத்திக் கொள்ளப்பட்டன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு-
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை, இன்னமும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அந்த கூட்டமைப்பு, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் பயங்கரமான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறாத வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்னெடுப்புகளை மேற்கொள்ளவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையின்படி தற்போது தென்னாபிரிக்காவுக்கு சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், அந்த நாட்டின் உண்மை மற்றும் நல்லிணக்க யோசனையில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் சொந்த அனுபவங்களை கேட்டறிந்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்காக தென்னாபிரிக்கா, 2011 ஆம் ஆண்டில் தமது மத்தியஸ்த முயற்சிகளை ஆரம்பித்தது.
இதன்கீழ் தென்னாபிரிக்காவின் உதவி வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை சென்று பேச்சுக்களை நடத்தியிருந்தார். இதன்படி தென்னாபிரிக்காவின் யோசனையை ஏற்று தமிழ்த்தேசியக் கூடட்மைப்பு 2011 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தியது.
அத்துடன் 2011 ஆம் ஆண்டு மார்;ச் மாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இனப்பிரச்சினை தீhவுக்கான காத்திரமான யோசனை ஒன்றையும் முன்வைத்தது. எனினும் இலங்கை அரசாங்கம் அதற்கு எந்த பதிலையும் வழங்காது சுமார் 5 மாதங்களை வெறுமனே கடத்தியது.
இதனையடுத்து அடுத்து பேச்சுவார்த்தைக்கான திகதி கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தநிலையில் இலங்கையின் ஜனாதிபதி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை சந்தித்ததை அடுத்து இரண்டு தரப்புக்கும் இடையில் பேச்சுக்கள் 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆரம்பமாகின.
ஏற்கனவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த 5 கோரிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் பதில் வழங்க வேண்டும். இந்த யோசனைகளில் கூறப்பட்டுள்ள விடயங்களில் இணக்கங்கள் ஏற்படுமிடத்து.
கூட்டமைப்பு அரசாங்கத்தின் யோசனையான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இணையும் என்ற அடிப்படையிலேயே 2011 செப்டம்பர் மாதத்தில் இலங்கை அரசாங்கத்துக்கும் தமக்கும் இடையிலான பேச்சுக்கள் ஆரம்பமானதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.