பக்கங்கள்

பக்கங்கள்

17 பிப்., 2013


ஸ்காபுறோ தமிழரின் கடையில் புகுந்து துப்பாக்கி முனையில் மிரட்டிய கும்பலை துணிச்சலுடன் எதிர்கொண்ட தமிழ்த் தம்பதிகள்!!
 ஸ்காபுறோ தமிழரின் கடையில் புகுந்து துப்பாக்கி முனையில் மிரட்டிய கும்பலை துணிச்சலுடன் எதிர்கொண்ட தமிழ்த் தம்பதிகள்!!

 
ஸ்காபுரோவில் பட்டுச் சேலைகள்  மற்றும் இதர துணிமணிகளை விற்று வரும் பிரபல நிருவனங்களுள் ஒன்று ராஷி சில்க்ஸ். பிரேமநாதன் மற்றும் ஜெயந்தினி கண்ணப்பநாதனுக்குச் சொந்தமான இந்தக் கடையில் பேரம் பேசி துணிகளை வாங்குவதற்கு பலர் வருவது வழக்கம்.
 
இரு நாட்களுக்கு முன்னர் துப்பாக்கி ஏந்திய 17 வயது இளையோர் இருவர் இந்தக் கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் உரிமையாளர்களையும் , பணியாற்றியவர்களையும் மிரட்டியுள்ளனர். சாதுர்யத்துடனும் , துணிச்சலுடனும் கணவன், மனைவி இருவரும் துப்பாக்கி ஏந்திய கும்பலுடன் போராடி அவர்களை காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இருவரின் துணிச்சலுடன் போராடியதைக் கண்டு பலர் வியந்துள்ளனர். குறிப்பாக பெண்மணி ஒருவர் கயவர்களுடன் துணிச்சலாக சண்டையிட்டதே நேற்று கனடிய ஊடகங்கள் அனைத்திலும் பெரிதாய் பேசப்பட்டது,