பக்கங்கள்

பக்கங்கள்

14 பிப்., 2013


காஜல் அகர்வாலை அறிமுகப்படுத்தியதற்காக வெட்கப்படுகிறேன்: பாரதிராஜா

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வருபவர் காஜல் அகர்வால். இவர், சமீபத்தில் ஒரு பத்திரிகை பேட்டியில், தமிழ்நாட்டில் நடிகைகளை மதிப்பதே இல்லை. நடிகர்களைத்தான் மதிக்கிறார்கள். தெலுங்கில் நடிகைகளுக்கு
மதிப்பு இருக்கிறது என்று கூறியிருந்தார்.

இதற்கு தமிழ்நாட்டில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதைய டுத்து, காஜல் அகர்வால், ‘நான் அப்படி சொல்ல வே இல்லை. பத்திரிகைகள்தான் தவறாக எழுதிவிட்டன’ என மறுப்பு கூறினார்
இந்நிலையில் இதுகுறித்து காஜல் அகர்வாலை தனது ‘பொம்ம லாட்டம்’ படத்தின் மூலம் அறிமுகப் படுத்திய இயக்குனர் பாரதிராஜா, ’’அந்த பொண்ணு ரொம்பவும் திமிர் பிடித்தவர். யாரையும் மதிக்காதவர். அவரை நான் அறிமுகப் படுத்தியதற்காக வெட்கப்படுகிறேன்’’ என்று கூறியுள்ளார். 
இதை கேள்விப்பட்டதும், காஜல் அகர்வால் உடனடியாக பாரதிராஜாவிடம் விளக்கம் சொல்ல, அவரை தொடர்பு கொள்ள முற்பட்டார். ஆனால், பாரதிராஜா தரப்பிலிருந்து எந்தவித பதிலும் வரவில்லையாம்.