பக்கங்கள்

பக்கங்கள்

15 பிப்., 2013


தமிழினப்படுகொலை விவாகாரம்: ஐ.நா சட்டவிதி 99ஐ பயன்படுத்துமாறு ஐ.நா பொதுச்செயலுருக்குரிய மலேசியத் தமிழர்கள் கோரிக்கை மனு!
ஐ.நா.சபையின் சட்ட விதி 99ஐ பயன்படுத்தி இலங்கைத்தீவில் ஈழத்தமிழினத்திற்கு எதிராக சிங்கள அரசினால் நடாத்தப்பட்ட போர்குற்றம் மற்றும் இனஅழிப்பு குறித்து ஓர் சர்வதேச சுயாதீன விசாணையினையொன்றினை நடத்துமாறு ஐ.நா பொதுச் செயலரை வலியுறுத்தும் நோக்கில் மலேசியத் தமிழர்கள் கோரிக்கை மனுவொன்றினை வழங்கியுள்ளனர்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மலேசியத் தோழமை மையத்தின் ஒருங்கிணைப்பாளரும் சுவராம் மனித உரிமைக் கழகத் தலைவருமாகிய கா. ஆறுமுகம் தலைமையில் மலேசியத் தலைநகர் கோலாம்பூரில் உள்ள ஐ.நா நிறுவன அதிகாரிகளிடம் இந்தக் கோரிக்கை மனுவினை மலேசியத் தமிழர் அமைப்பு பிரதிநிதிகள் கூட்டாக கையளித்துள்ளனர்.
இலங்கை மீதிலான மலேசிய நாடாளுமன்றக் கூட்டமைப்பின் ஆதரவில் அரசு சார்பற்ற அமைப்புகள் அந்த கோரிக்கை மனுவை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் மனோகரன் மாரிமுத்து, தமிழ் அறவாரியத் தலைவர் சி.பசுபதி, டத்தோ ஹாஜி தஸ்லீம் முகமட் இப்ராஹிம், நகராண்மைக் கழக உறுப்பினர் குணராஜ், சிலாங்கூர் நடவடிக்கை குழுத் தலைவர் சேகரன், கேமரன்மலை மலேசிய சோசியலிஸ்ட் கட்சி தலைவர் அமைச்சியப்பன், அதன் செயலாளர் சுரேஷ் குமார் ஆகியோர் அடங்கிய குழு ஐ.நா பணிமனையில் அம்மனுவை வழங்கினர்.
இறுதிகட்டப் போர் உக்கிரமாக கட்டவிழ்த்து விடப்படிருந்த காலக்கட்டதில் கூட இதே ஐநா சபை அலுவலகத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்துத் தமிழர்களைக் காக்குமாறு மனு கொடுத்தோம். உலக தமிழர்கள் அனைவரும் குரல் கொடுத்தார்கள்; மனு கொடுத்தார்கள். ஆனால் ஐநா சபை மக்களைக் காக்கின்ற தனது பொறுப்பிலிருந்து தவறி விட்டது. அந்த வரலாற்று தவறைச் சரி செய்ய வேண்டிய மிக முக்கிய கால கட்டத்தில் ஐநா சபை இன்று இருக்கிறது. அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக இந்த அதிநவீன காலத்தில் என்ன நடக்கிறது என்று தெரிந்தும் மௌனமாக வேடிக்கை பார்த்த ஐ.நாவின் செயல் வருந்தத்தக்கது மட்டுமல்ல அது கடுமையான கண்டனத்திற்குரியது என  நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மலேசியத் தோழமை மையத்தின் ஒருங்கிணைப்பாளரும் சுவராம் மனித உரிமைக் கழகத் தலைவருமாகிய கா. ஆறுமுகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.