பக்கங்கள்

பக்கங்கள்

16 பிப்., 2013


வவுனியா புனர்வாழ்வு முகாமில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் தோழியாக தமிழினி
வவுனியா நலன்புரி முகாமில் அண்மையில் இடம்பெற்ற முன்னாள் போராளிகளின் திருமண நிகழ்வொன்றில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவு அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த ‘தமிழினி’ மணமகளுக்கு தோழியாக கலந்து கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
சுப்பிரமணியம் சிவகாமி என்னும் சொந்த பெயர் கொண்ட தமிழினி கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்தவர்.
1991ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைந்துகொண்டார்.
27.05.2009 அன்று வவுனியா நலன்புரி முகாமில் கைது செய்யப்பட்ட தமிழினி கொழும்புக்கு கொண்டு வரப்பட்டு கடுமையான விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கமைய வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.
26.06.2012 அன்று வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு புனர்வாழ்வு பெற்று வருகிறார்.
ஒருவருட காலத்திற்கான புனர்வாழ்வுக்கு அவர் உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
வவுனியா புனர்வாழ்வு மையத்தில் நடைபெற்ற முன்னாள் விடுதலைப்புலி போராளிகளின் திருமண நிகழ்வில் மணமகளுக்கு தோழியாக இருந்த தமிழினியின் புகைப்படம்
அன்றைய தோற்றமும் இன்றைய நிலையும்