பக்கங்கள்

பக்கங்கள்

8 பிப்., 2013

இஸ்ரேலை தரை மட்டமாக்கி அழித்து விடுவோம்: ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலை முற்றிலுமாக அழித்து விடுவோம் என அந்நாட்டின் ஜனாதிபதி மஹ்துத் நிஜாத் தெரிவித்துள்ளார்.
எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்று வருகிற இஸ்லாமிய கூட்டுறவு நாடுகளின் மாநாட்டில் பங்கேற்றுள்ள ஈரான் ஜனாதிபதி எகிப்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஈரான் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடவும், ஈரான் மீது தாக்குதல் நடத்தவும் இஸ்ரேல் நினைத்துக் கொண்டுள்ளது. அப்படி தாக்குதல் நடத்தினால் ஈரானின் பதிலடி எப்படி இருக்குமோ? எதிர் விளைவு என்ன ஆகுமோ? என்ற அச்சத்திலும் இஸ்ரேல் உள்ளது.
ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலை தரைமட்டமாக்கி அழித்து விடுவோம் என அவர் எச்சரித்துள்ளார்.