பக்கங்கள்

பக்கங்கள்

26 பிப்., 2013


புலம்பெயர் தமிழ் மக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழு ஐ.நா மனிதஉரிமை கூட்டத் தொடரில் பங்கேற்பு
ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத் தொடரில் பங்கேற்க புலம்பெயர் தமிழ் மக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று பயணமாகியுள்ளது.
இக்கூட்டத்தொடரில் பங்கு கொள்வதற்காக பிரித்தானிய தமிழர் பேரவையின் ( BTF ) ஒருங்கிணைப்பில், கனேடிய தமிழர் காங்கிரஸ் ( Canadian Tamil Congress), அமெரிக்க தமிழ் அரசியல் செயலவை ( United States Tamil Political Action Council), ஆகிய அமைப்புக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழு அங்கு சென்றுள்ளது.
இதற்கு முன்னர் இடம் பெற்ற பல்வேறு நாடுகளின் இராஜதந்திரிகள் மட்ட சந்திப்புகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் இக் குழு எதிர்நோக்கக் கூடிய சவால்களை கணிப்பீடு செய்து தமிழர் தரப்பு எடுக்க வேண்டிய அசைவுகளை திட்டமிட்டுள்ளது.
இவர்கள் ஒரு மாத காலம் அங்கு தங்கி இருந்து ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ .நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருக்கும் வெளிநாட்டமைச்சர்கள்,இராஜதந்திரிகள், மனித உரிமைகள் நிபுணர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் என்று பலருடனும் தொடர்ச்சியான சந்திப்புக்களை நடத்த திட்டமிட்டுள்ளது.