பக்கங்கள்

பக்கங்கள்

20 பிப்., 2013

பூரண மதுவிலக்கை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டுள்ள ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோவை, அந்த வழியாக சென்ற முதல்வர் ஜெயலலிதா திடீரென சந்தித்தமை அரசியல் களத்தில் மாற்றம் ஏற்பட வழிவகுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் முழுமையாக மது விலக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி ம.தி.முக பொதுசெயலர் வைகோ கோவளத்தில்
இருந்து நடைபயணத்தினை ஆரம்பித்தார்.
இன்று பகல் 3மணியளவில் சிறுதாவூர் அருகே பையனூர் கிராமத்தில் வைகோ தொண்டர்களுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
இந்நேரத்தில் எதிரே காரில் வந்துகொண்டிருந்த முதல்வர் ஜெயலலிதா, வைகோ செல்வதை பார்த்து, காரில் இருந்து இறங்கி வைகோ அருகில் சென்றார்.
அந்த இடத்திலேயே 15 நிமிடங்கள் இருவரும் பேசிக்கொண்டனர். ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து கொண்டனர்.
பின்னர் வைகோ, ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு (எதிர்வரும் பெப்ரவரி- 24 ) வாழ்த்து தெரிவித்தார். இருவரும் வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டமை அங்கிருந்த தொண்டர்களை உணர்ச்சி பெருக்கில் ஆழ்த்தியது.