பக்கங்கள்

பக்கங்கள்

24 பிப்., 2013

ப.சிதம்பரம் வீடு முற்றுகை! இந்து மக்கள் கட்சியினர் கைது!
சென்னை சாஸ்திரிபவன் எதிரில் உள்ள மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டின் முன்பு இந்து மக்கள் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்துரமேஷ்குமார் தலைமையில் நடந்த இந்த முற்றுகை போராட்டத்தில், சுமார் 30 பேர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முத்துரமேஷ்குமார், இலங்கையில் தமிழர்கள் 3 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். அப்போதும் வாய் திறக்காத இந்த காங்கிரஸ் அரசு, தற்போது பிரபாகரன் மகன் 12 வயது சிறுவன் பாலச்சந்திரன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட படம் பத்திரிகைகளில் வெளிவந்தபோதும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் மவுனம் காக்கிறது மத்திய அரசு.
இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சரான ப.சிதம்பரமும் துணை நிற்கிறார். எனவே அவரது வீட்டை முற்றுகையிடுகிறோம். எங்களுடைய கோரிக்கை இலங்கை அரசு மீது எந்த பாரபட்சமும் இல்லாமல் பொருளாதார தடை விதிக்க வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சே போர் குற்றவாளி என்று அறிவித்து இலங்கை அரசு மீது விசாரணை நடத்த வேண்டும். தமிழ் உணர்வு உள்ள அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்களும் தங்களது பதவிகளை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.