பக்கங்கள்

பக்கங்கள்

13 பிப்., 2013

விநோதினியின் உடலை, அவரது தந்தை ஜெயபாலின் சொந்த ஊரான  நாகை மாவட்டம் திருக்கடையூருக்கு எடுத்துச் சென்று இன்று இரவோ அல்லது நாளை காலையோ தகனம் செய்ய, விநோதினியின் குடும்பத்தார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த விநோதினியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில், விநோதினியின் உடலை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டது.
தனியார் மருத்துவமனையில் நேற்று காலை மரணம் அடைந்த விநோதினியின் உடல் இன்று காலை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிறகு பெற்றோரிடம் அளிக்கப்பட்டது.
கோயம்பேட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிறகு, புதுச்சேரி கொண்டு செல்லப்படுகிறது. அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.