பக்கங்கள்

பக்கங்கள்

21 பிப்., 2013



இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் - பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனும் இலங்கை விடயம் தொடர்பில் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவுக்கான மூன்று நாட்கள் விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதமர், நேற்று மன்மோகன் சிங்கை சந்திதத போது, இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் மற்றும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இதில் தமிழர்கள் தொடர்பாக பேசிக் கொள்ளப்பட்ட விரிவான விடயங்கள் தொடர்பில் தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.