பக்கங்கள்

பக்கங்கள்

25 பிப்., 2013


இலங்கை தொடர்பில் சுதந்திரமான ஓர் அனைத்துலக விசாரணை வேண்டும் : ஐ.நா மனித உரிமைச்சபையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்


இலங்கைத்தீவினை மையப்படுத்திய அனைவரது பார்வையினையும் நோக்கியதாகவுள்ள ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பில் சுதந்திரமான ஓர் அனைத்துலக விசாரணையின் அவசியத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்துகின்றது.

இலங்கை அரசாங்கத்திற்கு சவால்மிகுந்த இராஜதந்திரக்களமாக ஐ.நா மனித உரிமைச்சபை அமைந்துள்ள நிலையில் சர்வதேச அரங்கொன்றில் இலங்கை அரசாங்கத்தினை அம்பலப்படுத்தவும் – தனிமைப்படுத்தவும் – தமிழர்களின் நியாயமான உரிமைப்போராட்டத்தினை வலியுறுத்தியும் ஐ.நா மனித உரிமைச் சபையில் பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் கூடிவருகின்றனர்.
இந்நிலையில் இலங்கைத்தீவில் யுத்தத்தின் போதும், யுத்தத்தின் பின்னரும் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசினால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள், மானுடத்திற்க்கு எதிரான குற்றங்கள், இனஅழிப்புக் குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமான ஓர் அனைத்துலக விசாரணையின் அவசியத்தினை மையப்படுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
ஐ.நா மனித உரிமைச்சபை விகாரங்களுக்கான நா.தமிழீழ அரசாங்கத்தின் வளஅறிஞர் குழுவினர் மற்றும் நா.தமிழீழ அரசாங்கப்பிரதிநிதிகள் ஜெனீவாவிலும் வௌ;வேறு நாடுகளிலும் தங்களது இராஜதந்திரச் செயற்பாடுகளைத் பல்வேறு மட்டங்களிலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் தாங்கள் வாழுந்த அந்தந்த நாடுகளுக்கு இலங்கை தொடர்பில் சுதந்திரமான ஓர் அனைத்துலக விசாரணையினை வலியுறுத்தும் வகையில் தாபால் அட்டைகளையும் நாடுகடந்த தமிழீழ வெளியிடுகின்றது.