பக்கங்கள்

பக்கங்கள்

28 பிப்., 2013


இலங்கை தூதரகம் மீது தாக்குதல்! பிரபாகரன் மகன் கொலையை கண்டித்து போராட்டம்!
 
பிரபாகரன் மகன் கொடூரமாக கொல்லப்பட்டதை கண்டித்து மலேசியா தலைநகரான கோலாலம்பூரில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 


தமிழர் உதவும் கரங்கள், மலேசிய தமிழர் முன்னேற்ற இயக்கம் ஆகிய அமைப்புகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டன. போராட்டக்காரர்களை போலீசார் கலைந்து செல்லும்படி கூறினார்கள். 

போராட்டத்தில் ஈடுபட்ட 3 தமிழக தலைவர்களை கைது செய்து அழைத்து செல்ல முயற்சித்தனர். இதனால் போலீசாருக்கும், தமிழர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் தமிழர்கள் திடீரென இலங்கை தூதரகம் மீது தாக்குதல் நடத்தினார்கள். தூதரகம் முன்பக்கம் இருந்த கதவு உடைக்கப்பட்டது. போலீசார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தினார்கள்.