பக்கங்கள்

பக்கங்கள்

21 பிப்., 2013

அவுஸ்ரேலியாவில் உயரம் பாய்தல் யாழ்.இந்துவீரன் இரண்டாமிடம்.

அவுஸ்ரேலியா அல்பேட் பார்க்கில் நடைபெற்ற தடகள விளையாட்டுப் போட்டியில் யாழ். இந் துக்கல்லூரி வீரன் இரத்தின சிங்கம் செந்தூரன் 16 வயதுக் குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தல் நிகழ்வில் 1.95 மீற்றரைக் கடந்து இரண்டாமிடத் தைத்தட்டிக்கொண்டார்.

நேற்று மாலை இப்போட்டி நடை பெற்றது. இவர் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் 1.92 மீற்றர் உயரம் பாய்ந்து சாதனை முறியடிப்புச் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வடக்கில் இருந்து சென்ற ஒரே ஒரு வீரர் இவர் ஆவார்.
இவரது இந்த வெற்றிக்குக் கல்லூரி அதிபர், விளையாட் டுத்துறைப் பொறுப்பாசிரியர் சுவாமிநாதன் மற்றும் பயிற்சியாளர் செ.றமணன் ஆகியோர் வழி அமைத்துக் கொடுத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.