பக்கங்கள்

பக்கங்கள்

5 பிப்., 2013


ராஜபக்சே இந்தியா வருகையை கண்டித்து
 8-ந்தேதி சென்னையில் போராட்டம்: கலைஞர் அறிவிப்பு
தமிழ் ஈழம் ஆதரவு அமைப்பான டெசோ உறுப்பினர்களின் கலந்துரையாடல் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலைஞர் தலைமை தாங்கினார். 



இந்த அமைப்பினர் உறுப்பினர்களாக இருக்கும் மு.க. ஸ்டா லின், அன்பழகன், கி.வீரமணி, சுப வீரபாண் டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன், திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்
கலந்துரையாடலுக்குப் பிறகு கலைஞர், ‘’ராஜபக்சே இந்தியா வருகையை கண்டித்து 8-ந்தேதி எனது தலைமையில் சென் னையில் போராட்டம் நடைபெறும். இந்த போராட்டத்தில் டெசோ அமைப்பினர் கருப்பு உடை அணிந்து கலந்து கொள்வார்கள். இலங்கை வீரர்களுக்கு தமிழகத்தை தவிர இந்தியாவின் வேறு எந்த இடத்திலும் பயிற்சி என்பதை ஏற்க முடியாது. 
மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதலை கண்டி த்து ராமேஸ்வரத்தில் 18-ந்தேதியும், நாகையில் 19-ந்தேதியும் போராட்டம் நடைபெறும். இலங்கை தமிழர்கள் குறித்து மார்ச் மாதம் டெல்லியில் கருத்தரங்கம் நடைபெறும்’’ என்று கூறினார்.