பக்கங்கள்

பக்கங்கள்

21 பிப்., 2013


இறுதிபோரில் வெறியாட்டம்: சானல்-4 ன் புதிய வீடியோ ஆதாரம்

பிரபாகரன் மகன் பாலசந்திரனை சிங்கள ராணுவத்தினர் பிடித்து வைத்து கொன்ற வீடியோ ஆதாராத்தை இங்கிலாந்து டி.வி.யான சானல்-4 வெளியிட்டது.

தற்போது இந்த நிறுவனம் புதிய ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளது. ‘நோ பயர்சோன்’ என்ற பெயரில் தயாரிக் கப்பட்டுள்ள இந்த ஆவணபடம் 90 நிமிடம் ஓடுகிறது. 
இலங்கை இறுதிகட்ட போரின்போது ‘நோ பயர்சோன்’ என்று அறிவிக்கப்பட்டிருந்த இடத்தில் சிங்கள ராணுவம் எந்த மாதிரி கொடுமையான தாக்குதல் நடத்தின என்பது பற்றிய முழு விபரங்களும், அதற்கான வீடியோ, போட்டோ ஆதாரங்கள் அதில் சேர்க்கப்பட்டுள்ளன. 
இந்த ஆவணப்படத்தை கெல்லம் மெக்கரே என்பவர் தயாரித்துள்ளார். அடுத்த மாதம் ஜெனிவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தில் இது வெளியிட உள்ளதாக கெல்லம் மெக்கரே தெரிவித்துள்ளார். இந்த படத்தின் பல்வேறு புதிய காட்சிகளும், போரின் பின்னணி குறித்த கூடுதல் விவரங்களும் இணைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 
இந்த ஆவணப்படம் இலங்கையில் போர் குற்றம் நடந்ததற்கான முழு ஆதாரமாக இருக்கும். இதை பார்த்தால் அங்கு என்ன போர்க்குற்றங்கள் நடந்தது என்பது தெளிவாக தெரியும் என்றும் கூறியுள்ளார். இந்த ஆவண படத்தின் முக்கிய காட்சிகளை அடுத்த வாரம் டெல்லியில் இந்திய எம்.பி.க்கள் குழுவிடம் காண்பிக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.