பக்கங்கள்

பக்கங்கள்

8 பிப்., 2013


ஜெயலலிதாவை சந்திக்க கமல் விருப்பம் : அனுமதி கேட்டு கடிதம்
 விஸ்வரூபம் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் நடிகர் கமல் செய்தியாளர்களை சந்தித்தார். சந்திப்பின் போது பேசிய கமல், விஸ்வரூபம் திரைப்படத்தை
வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார். 
ரசிகர்களின் அன்பை தாம் என்ன செய்து தீர்ப்பேன் என்று நெகிழ்வுடன் கூறியுள்ளார். ரசிகர்கள் பலர் காசோலையாகவும், பணமாகவும், அவர்கள் வீட்டுப்பத்திரங்களையும் வீட்டுச் சாவிகளையும் அனுப்பி தம்மை நெகிழ்வுறச் செய்து விட்ட தாகவும் கமல் கூறியுள்ளார். 
ரசிகர்களின் அன்பிற்கு தமது எஞ்சிய வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் ஈடாகாது என்றும் குறிப்பிட் டுள்ளார். மேலும் பேசிய கமல் மனதளவில் தனது பங்காளிகளாக செயல்பட்ட ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியுள் ளார். சககலைஞர்களின் பாராட்டு தமக்கு உழைக்கும் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். 
ரசிகர்கள் மற்றும் மக்கள் தம் மீது காட்டிய அன்பால் பாடம் கற்றுக் கொண்டதாக கமல் உருக்கமுடன் கூறினார். ரசிகர்கள் மற்றும் மக்கள் தம் மீது காட்டிய அன்பால் பாடம் கற்றுக் கொண்டதாக கமல் உருக்கமுடன் கூறினார். தமக்குள்ள சமூக கடமையை ரசிகர்கள் அன்பால் உணர்த்திவிட்டதாகவும் கூறினார். ரசிகர்கள், மக்கள் ஆகியோரின் பேரன்புக்கு முன் தாம் ஒன்றுமே இல்லை என்றும் கூறினார். விஸ்வரூபம் வடமாநிலங்களிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.
விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தாமே எதிர்பார்க்காத அளவிற்கு ரசிகர்கள் வெற்றியை தந்துள்ளதாக கமல் பெருமிதத்துடன் கூறியுள்ளார். தமது கடன்களை அடைத்தே தீருவோம் என்ற வெறியுடன் ரசிகர்கள் இந்த வெற்றியை தமக்கு அளித்துள்ளதாக கூறியுள்ளார்.  
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க விருப்பமாக உள்ளதாகவும் அவரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் கூறியுள்ளார்.