பக்கங்கள்

பக்கங்கள்

25 பிப்., 2013


இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா இரண்டு நாள் விஜயம் மேற்கெண்டு யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இந்திய உயர்ஸ்தானிகர் பலாலியில் அமைக்கப்பட்டுள்ள 33 இந்திய படையினரின் நினைவுச் சின்னத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவப்பிரிவின் 10 ஆவது பரா கொமாண்டோப் பிரிவிற்கும் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மைதானத்தில் இடம்பெற்ற சமரில் லெப்.கேணல் ஏ. கேசகாப்ரா உள்ளிட்ட 33 இந்திய பரா கொமாண்டர்கள் கொல்லப்பட்டனர்.
இவர்களின் நினைவாக இலங்கை இராணுவத்தினரால் பலாலி படைத்தளத்தினுள் 2008 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நினைவு சின்னத்திற்கே முதல் முறையாக இந்தியத் தூதுவர் அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.