பக்கங்கள்

பக்கங்கள்

17 பிப்., 2013

www.nofirezone.org
இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் இரண்டு ஆவணப் படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் கேலம் மெக்கரே தற்போது 'நோ பயர் சோன்' என்ற பெயரில் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
இந்தப் படம் அடுத்த மாதம் ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் திரையிடப்படவுள்ளது.
சேனல் 4, புலிட்சர் மையம் உள்ளிட்ட அமைப்புக்களின் நிதி உதிவியுடன் தயாரிக்கப்பட்ட இப்படத்தின் முக்கிய காட்சிகள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு வரும் வாரம் டில்லியில் காண்பிக்கப்படவுள்ளது.
"இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பான ஓர் உறுதியான ஆவணமாக இந்தப் படம் இருக்கும். போர்க் குற்றம் குறித்த நடவடிக்கைகளை எடுக்க இது தூண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அங்கே நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்த புதிய ஆதாரங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. அங்கே என்ன நடந்தது என்பது குறித்த புரிதலை ஏற்படுத்த இது உதவும்" என்றார் கேலம் மெக்கரே.
www.nofirezone.org
இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் இரண்டு ஆவணப் படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் கேலம் மெக்கரே தற்போது 'நோ பயர் சோன்' என்ற பெயரில் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் திரையிடப்படவுள்ளது.