பக்கங்கள்

பக்கங்கள்

11 மார்., 2013


வேலூரில் அரசு கல்லூரி  மாணவர்கள் உண்ணாவிரதம்
 
இலங்கை மீது அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என கேட்டு உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டு பேரை கைது செய்து போராட்டத்தை கலைத்ததற்க்கு கண்டனம் தெரிவித்தும், இலங்கை மீது அமெரிக்கா கொண்டு வரும் மனித உரிமை மீறல் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என கேட்டு வேலூர் அரசு கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் அதிகமானோர் இன்று 11.3.13ந்தேதி உண்ணாவிரதப்போராட்டத்தை தொடங்கினர்.

கல்லூரி வளாகத்துக்குள் நடக்கும் இந்த உண்ணாவிரதப்போராட்டத்தை கலைக்க காவல்துறை, கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம், தற்போது வேலூரில் கவர்னர் முகாமிட்டுள்ளார்.

இந்த நேரத்தில் உண்ணாவிரதம் இருப்பது பதட்டத்தை ஏற்படுத்தும் என்றனர். மாணவர்கள் பிடிவாதகமாக எங்களது மன குமுறல்களை வெளிப்படுத்த விடுங்கள் என கோரிக்கை எழுப்பி தங்களது உண்ணா விரதத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.