பக்கங்கள்

பக்கங்கள்

15 மார்., 2013


மத்திய அமைச்சரவையில் திமுக நீடிப்பது அர்த்தமற்றதாகிவிடும்! கலைஞர் எச்சரிக்கை
 
திமுக தலைவர் கலைஞர் 15.03.2013 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 இலங்கையில் அண்மை காலத்தில் நடைபெற்ற
இனப்படுகொலை குறித்தும், அந்த படுகொலைக்கு காரணமான போர் குற்றவாளிகள் என அடையாளம் காட்டப்படுபவர்கள் மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தி குறிப்பிட்ட காலவரையறைக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற திருத்தத்தை அமெரிக்க அரசின் தீர்மானத்தில் சேர்ப்பதற்கான முயற்சியினை எந்த அய்யப்பாட்டிற்கும் இடம் கொடுக்காத வகையில் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் திமுக இந்திய அரசின் அமைச்சரவையில் இனிமேலும் நீடிப்பதென்பது அர்த்தமற்றதாகிவிடும் என்பதை உறுதிப்பட தெரிவித்துக்கொள்கிறேன். 
இவ்வாறு திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.