பக்கங்கள்

பக்கங்கள்

7 மார்., 2013



ஜனாதிபதி ராஜபக்ஷவை கண்டித்து ஆர்ப்பாட்டம் : ஒருவர் தீக்குளிக்க முயற்சி

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 16 தமிழக மீனவர்களை விடுவிக்க கோரியும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கண்டித்தும் சென்னை புறநகர் நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று காலை தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இதில் கலந்துகொண்ட காட்டுப்பாக்கத்தை சேர்ந்த முத்தரசு(27) என்பவர் தீக்குளிக்க முயற்சி செய்தார். தன் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டார். இதனையடுத்து அவ்விடத்தில் இருந்த பொலிசார் தடுத்து நிறுத்தினர். மேலும், அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் செய்ததாக கூறி 30 பேரை கைது செய்தும் உள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன
.