பக்கங்கள்

பக்கங்கள்

29 மார்., 2013



இலங்கை கிரிக்கெட் அணியில் அமைச்சர் கெஹலியவின் மகன் இணைப்பு


பங்களாதேஷ் அணிக்கு எதிரான 16 பேர் கொண்ட இலங்கை அணியில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் 

ரம்புக்வெல்ல இணைக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு இருபது-20 போட்டி தொடர்களில் பங்கேற்கின்றது.

இதில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. அதே மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

இந்நிலையில் நாளை கண்டியில் இடம்பெற உள்ள மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டது. 16 பேர் கொண்ட இலங்கை அணியில் அமைச்சர் கெஹலியவின் மகனும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.


அணியின் விபரம் வருமாறு,

குஷால் ஜனித் பெரேரா, டில்ஷான் முனவ்வீர, லஹிரு திரிமான, தினேஷ் சந்திமால்(இருபது-20 அணித் தலைவர் ஃ விக்கெட் காப்பாளர்), ஏன்ஜலோ மெத்திவ்ஸ், ஜீவன் மெண்டிஸ், கித்ருவான் விதானகே, ஏன்ஜலோ பெரேரா, லசித் மாலிங்க (உப தலைவர்) சதித்ர சேனநாயக்க, சமிந்த ஏரங்க, சதுரங்க டி சில்வா, சேஹான் ஜயசூரிய, ரமித் ரம்புக்வெல்ல, ஈஷான் ஜயரத்ன, திசேர பெரேரா


பங்களாதேஷ் அணிக்கு எதிரான நாளைய ஒருநாள் போட்டியிலும் 31 ஆம் திகதி இடம்பெறவுள்ள 20-இருபது போட்டியில் இதே அணி பங்குபற்றும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.