பக்கங்கள்

பக்கங்கள்

4 மார்., 2013


தமிழக மீனவர்களுக்கு வரும் 18ம் தேதி வரை நீதிமன்ற காவல்! இலங்கை கோர்ட் உத்தரவு!
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் 3 விசைப் படகுகளில் மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அவர்களை இலங்கை கடற்படை 3-தேதி
அதிகாலை பிடித்துச்சென்றது.

அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படாமல் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேரையும் இலங்கையில் உள்ள கற்பிட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 18-ம் தேதி வரை நீர்கொழும்பு சிறையில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.