பக்கங்கள்

பக்கங்கள்

18 மார்., 2013


பரதேசி படத்திற்கு ஒரே ஒரு தேசிய விருது!
விஸ்வரூபம் படத்திற்கு 2 தேசிய விருதுகள்!!
 


60- வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. 
சிறந்த இயக்குனர் விருதுக்கு மராத்தியில் வெளியான ‘தாக்’ படத்தை இயக்கிய சிவாஜி லோடன் படேல் தேர்வாகியுள்ளார். சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது ‘சிட்டகாங்’
என்ற படத்திற்காக பாடிய ஷங்கர் மகாதேவன் பெறுகிறார். சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘விக்கி டோனர்’ தேர்வாகியுள்ளது.


பாலா இயக்கத்தில் உருவான பரதேசி படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது.   சிறந்த உடை வடிவமைப்புக்கான விருதை பெறுகிறது பரதேசி திரைப்படம்.   இப்படத்திற்காக சிறந்த உடை வடிவமைப்பாளருக்கான விருதை பூர்ணிமா ராமசாமி பெறுகிறார்.
வழக்கு எண் படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  2012ம் ஆண்டிற்கான சிறந்த பிராந்திய மொழி படமாக வழக்கு எண் 18/19 தேரு செய்யப்பட்டுள்ளது.  சிறந்த ஒப்பனைக்கான விருதையும் தட்டிச்சென்றது வழக்கு எண்.

விஸ்வரூபம் படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  சிறந்த நடனம், தயாரிப்பு வடிவமைப்புக்கான விருது பெறுகிறது கமலின் விஸ்வரூபம்.
சுஹானி என்ற இந்திப்படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  சிறந்த பின்னணிப்பாடகருக்கான விருதை பெறுகிறார் சங்கர்மகாதேவன்.  சிட்டகாங் படத்தில் பாடியதற்காக சங்கர் மகாதேவனுக்கு விருது.  
தேசிய அளவில் சிறந்த படமாக பான்சிங்தோமர் என்ற இந்திப்படம் தேர்வாகியுள்ளது.   இப்படத்தில் நடித்த இர்ஃபான் கான் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.