பக்கங்கள்

பக்கங்கள்

14 மார்., 2013



சிறந்த விமானநிலையங்களாக 3 இந்திய விமானநிலையங்கள் தேர்வு
 
2012-ம் ஆண்டில் உலகிலேயே மிகச்சிறந்த 5 விமானநிலையங்களுள் ஒன்றாக, தரமான விமான சேவையின் மூலம் வருடத்துக்கு 25 முதல் 40 மில்லியன் பயணிகளைக் கையாளும் புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையம் 2-
ம் இடத்திலும், மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமானநிலையம் 3-வது இடத்திலும் இடம் பிடித்துள்ளது.

தரமான சேவையில் ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமானநிலையம் 2-ம் இடத்தைப் பிடித்துள்ளது. ஜப்பானைச் சேர்ந்த நகோயா விமானநிலையம் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. ஆசிய-பசிபிக் பிராந்திய அளவில் சிறந்த விமானநிலையமாக புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையம் 4-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. சியோலில் உள்ள இன்ஜியான் விமானநிலையம் முதலிடத்திலும், சிங்கப்பூரில் உள்ள சாங்கி விமானநிலையம் 2-ம் இடத்திலும், சீனாவின் பீஜிங் விமானநிலையம் மூன்றாவதாகவும் விருதுக்கு இடம்பிடித்துள்ளது என்று சர்வதேச விமான சபை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.