பக்கங்கள்

பக்கங்கள்

16 மார்., 2013


பரிந்துரைகளில் 50 வீதம் இலங்கை அரசினால் நிராகரிப்பு

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகளில் 50 சதவீதமானவற்றை இலங்கை நிராகரித்துள்ளதென மனிம உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. ஜெனிவா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் இன்று (15) கருத்து வெளியிட்ட மனித உரிமை கண்காணிப்பக பிரநிதிநி இவ்வாறு தெரிவித்தார். இலங்கை இராணுவம் புரிந்த யுத்தக் குற்றங்களை நிரூபிக்க கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் முழுமையானது அல்ல எனவும் ஆனால் தம்மால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசு தவறியுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆர்வலர்கள் பாதுகாக்க முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளையும் நிறைவேற்ற இலங்கை அரசு தவறிவிட்டதாக மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.